உர மூடை ஒன்று 1500 ரூபாவிற்கு அதிகமாக விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என  விவசாய அமைச்சர்  மஹிந்த அமரவீர  தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் முறையாக வழங்கப்படும் என்றும், கமநல சேவை அலுவலகங்களின் ஊடாக 500 ரூபாவிற்கும், சந்தையில் 1,500 ரூபாவிற்கும் உரம் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்காலத்தில் விவசாய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைத்து விவசாய நிறுவனங்களையும் இணைத்த வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாய அமைச்சகத்தின் விவசாயிகள் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் அவர் தெரிவித்தார்.