அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியான ஒஸ்மிங்டன் என்ற பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவரின் உடல் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கு வெளியே இரண்டு துப்பாக்கிகள் கிடப்பதை கண்டு அப்பகுதிவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நான்கு குழந்தைகள் உட்பட எழுவரின் உடல்களையும் மீட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த எழுவரும் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். கண்டிப்பாக இச் சம்பவம் தற்கொலை இல்லையெனவும் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்தவர்கள் யார்?  கொலைக்கான காரணம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 22 ஆண்டுகளில் நடைபெற்ற மிக பெரிய துப்பாக்கி சூடு சம்பவம் இது என ஒஸ்மிங்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.