இன்றைய திகதியில் பாடசாலை செல்லும் குழந்தைகளின் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சீமராஜா மற்றும் பெயரிப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்கும் தனுசுக்கும் இடையே பனிபோர் நடைபெற்று வருகிறது என்று திரையுலகினர் சொல்வார்கள். 

அதை உண்மையாக்குவது போல் சிவகார்த்திகேயனின் நடவடிக்கைகள் இருக்கிறது. தனுஷ் சொந்தமாக படத்தை தயாரித்தார். இவரும் தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் படத்தை ஒன்றை தயாரித்து வருகிறார். 

தனுஷ் பாடல் எழுதுவார். அதைப் போல் நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா என்ற படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையில் இடம்பெறும் ஒரு மெட்டிற்கு பாடல் எழுதி பாடலாசிரியராகவும் உயர்ந்திருக்கிறார். 

‘கல்யாண வயசு...’ எனத் தொடங்கும் அந்த பாடலை எழுதியிருக்கிறார். சிவகார்த்திகேயன் இந்த பாடலாசிரியர் அவதாரமும் அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்கிறார்கள் திரையுலகினர்.