இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டுசெல்ல முற்பட்ட இருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

 கைதுசெய்யப்பட்ட இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சுமார் 72 ஆயிரம் அமெரிக்க டொலர்களை மிகவும் சூட்சுமமான முறையில் பயணப்பையில் மறைத்து சிங்கப்பூருக்கு எடுத்து செல்ல முற்பட்டபோதே இவர்கள் இருவரையும் இன்று காலை சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்க டொலர்களின் பெறுமதி ஒரு கோடியே 11 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவென அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 30 வயதுடைய ஆணொருவரும் 55 வயதுடைய பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கும் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.