பௌத்த விகாரை தொடர்பான விசாரணைகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம்

Published By: Daya

11 May, 2018 | 05:06 PM
image

ஓட்டுசுட்டான் பகுதியிலுள்ள 64 ஆவது படைப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது. 

இந்நிலையில் குறித்த படைமுகாமின் பொறுப்பதிகாரியையும் இலங்கை இராணுவத் தளபதியையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விசாரணைகளுக்கு வருகை தருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கற்சிலைமடுப்பகுதியில் புதுக்குடியிருப்பு செல்லும் பிரதான வீதியில் தனியார் காணி ஒன்றில் 64 ஆவது படைப்பிரிவின் இராணுவ முகாம் அமைந்துள்ளது. அதில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி தனியார் ஒருவருக்குச் சொந்தமானது என்பதை பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது காணியை மீட்டுத்தருமாறு காணியின் உரிமையாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர். எல். வசந்தராஜா தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த படை முகாமின் பொறுப்பதிகாரியையும், இலங்கை இராணுவத்தளபதியையும், காணியின் உரிமையாளரையும் விசாரணைக்கு வருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலங்களில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் விசாரணை நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுவதுடன் மூவின மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53