தனியார் பஸ் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கையினை அரசாங்கத்திடம் கையளிக்க உள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்தார். 

சற்று முன்னர் கொழும்பில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.