மன்னார் நகரம் அபிவிருத்தி செய்யப்படும் - மன்னார் நகர முதல்வர்

Published By: Daya

11 May, 2018 | 04:43 PM
image

மன்னார் நகரத்தை பொறுத்த மட்டில் கடந்த காலங்களில் பல அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தேர்தல் காலங்களில் ஒவ்வொறு கட்சிகளும் வாக்குறுதிகளை வழங்கினாலும் மன்னார் நகரத்தை பொறுத்த மட்டில் இன்று வரை  அபிவிருத்தித்திட்டம் பின்னடைந்து வருகின்றது என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும்  தெரிவிக்கையில்,

மன்னார் நகரத்திற்குள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் தொடர்பாக பொது மக்களினால் எனக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொது மக்களின் முறைப்பாடுகளுக்கு அமைவாக நேற்று வியாழக்கிழமை குறித்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டேன். வீதிகளை ஆக்கிரமித்து நடை பாதைகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதை நேரடியாக அவதானித்தேன்.

வர்த்தகர்களுக்கு வியாபார நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட இடத்தின் அளவுத்திட்டத்திற்கு அமைவாக குறித்த இடங்களுக்குள் வைத்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வர்த்தகர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட இடங்களை தவிர நடை பாதைகளில் மக்களுக்கு இடையூரை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மன்னார் நகர சபை தடை விதித்துள்ளது.

மன்னார் நகர சபையின் அறிவித்தல்களையும் மீறி பாதசாரிகளுக்கு இடையூரை ஏற்படுத்துகின்ற வகையில் மேற்கொள்ளப்படும் வியாபார நடவடிக்கைகளுக்கு எதிராக நகரசபை சட்டதிட்டங்களுக்கு அமைவாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மன்னார் நகரத்தை பொறுத்த மட்டில் கடந்த காலங்களில் பல அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தேர்தல் காலங்களில் ஒவ்வொறு கட்சிகளும் வாக்குறுதிகளை வழங்கினாலும் மன்னார் நகரத்தை பொறுத்த மட்டில் இன்று வரை   அபிவிருத்தித்திட்டம் பின்னடைவில் இருந்து வருகின்றது.

-இனி வரும் காலங்களில் எங்களினூடாக யாரிடம் என்ன நிதியை பெற்று என்ன வேளைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமோ அனைத்து வேளைத்திட்டங்களும் நடை முறைப்படுத்தப்படும். பொய் வாக்குறுதிகளை  மக்களுக்கு வழங்குவதற்கு இடம் இல்லை.

இனி வரும் காலங்களில் மன்னார் நகரத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது என்னம். சக உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

கடந்த காலங்களில் அபிவிருத்தி என்று ஒன்றை மன்னார் நகரத்தை மையப்படுத்தியே  அரசியல் வாதிகளினால் நிதி பெற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த நிதிகள் எமது நகரத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படவில்லை.இனி வரும் காலங்களில் அபிவிருத்தி என்பது மன்னார் நகரத்தை மையப்படுத்தி இருக்க வேண்டும்.

அந்த அடிப்படையில் நிதி வழங்கப்படும் பட்சத்தில் மன்னார் நகரத்தை அலகு படுத்துவதோடு மன்னார் நகரத்தின் செயற்பாடுகளை நாங்கள் முன்னுக்கு கொண்டு வருவோம் என தெரிவித்தார்.

இதன் போது எதிர்வரும் மே-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் அவரிடம் வினவிய போது,

மே-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் பல தரப்பட்டவர்களினால் பல்வேறு விதமாக பேசப்படுகின்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வானது ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கான நிகழ்வாக கருதப்படுகின்றது. அதன் அடிப்படையில் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08