மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு வாகனேரி குளக்கரையோரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனேரி சுற்றுலாவிடுதி வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய  கால்நடைவளர்பாளரான 3 பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர்  சம்பவதினமான நேற்று இரவு 11 மணியளில் கால்நடைகளை பட்டியில் அடைத்துவிட்டு வாகனேரி குளத்தில் குளிக்கச் சென்றபோது குளப்பகுதியில் யானைத் தாக்குதலில் சம்பவ இடத்திலே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதில் உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை மாவட்டவைத்தியசாலையில் ஒப்படைகப்பட்டுள்ளது இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.