அத்தியவசியமான மருந்துகளுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். 

அத்தியாவசிய 48 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த இரு வாரங்களில் இன்னும்  சில மருந்துகளின் விலையை குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அரசாங்கத்தினால் நோயாளிகளுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த நாட்டில் இலவச சுகாதார சேவையை மேலும் விரிவுபடுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று  நடைபெற்ற சர்வதேச தாதியர் தின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெற்காசியா மாத்திரமன்றி  உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சுகாதாரம் நல்ல நிலையிலுள்ளதாக  உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.