எறிகணை தாக்குதலில் காலை இழந்த குடும்பப்பெண்ணுக்கு இராணுவத்தால் வீடு கட்டி கொடுப்பு

Published By: Daya

11 May, 2018 | 10:12 AM
image

1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து நாவற்குழி வீட்டு திட்டத்தில் வசித்து வந்தபோது எறிகணை தாக்குதலில் ஒரு காலை இழந்த அரியாலை மேற்கை சேர்ந்த குமாரிராதா புவனேஸ்வரன் என்கிற குடும்ப பெண்ணின் வீட்டின் கட்டுமான பணிகளை இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைதலைமையகம் முழுமைப்படுத்தி கொடுக்க முன்வந்து உள்ளது.

யாழ். மாவட்டத்தில் உள்ள வறிய, வருமானம் குறைந்த, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்பது கின்ற வேலை திட்டங்களின் கீழ்இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் அறிவுறுத்தலுக்கு அமைய இப்பெண்ணின் வீடுமுழுமைப்படுத்தி கொடுக்கப்படுகின்றது.

வறிய, வருமானம் குறைந்த, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பாடசாலை பிள்ளைகளுக்கு யாழ். கட்டள தலைமையகத்தில் வைத்து கடந்தவாரம் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டபோது இதில் குமாரிராதாவும் நேரில் பங்கேற்றார். இவரின் கோரிக்கையை நேரடியாக மேஜர் ஜெனரல் தர்ஷனஹெட்டியாராச்சியிடம் முன்வைத்தார்.

கடந்த 20 வருட காலத்துக்கும் மேலாக வீட்டின் கட்டுமாண பணிகளை முழுமைப்படுத்த முடியாமல் உள்ளார் என்றும் கட்டிமுடிக்கப்பட்டாத வீட்டில் வசிக்கமுடியாமல் இரவில் காணி ஒன்றில் குடிசையில் வாழ்கின்றார் என்றும் சொந்த வீட்டில்   குடியேறி வாழ வேண்டும் என்பதே இவரின் அபிலாசை ஆகும் என்றும் யாழ். மாவட்ட கட்டளை தளபதிக்கு தெரிவித்தார்.

இவரின் வேண்டுகோளை ஏற்று கொண்ட யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இவரின் விபரங்களைஆவணப்படுத்தியதுடன் இவருடைய கட்டி முடிக்கப்படாத வீட்டை நேரில் பார்வையிட்டு  பூர்வீக நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்டஇராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11