திருகோணமலை, சிறிமாபுர பகுதியில் இரு குழுக்களுக்களுக்கிடையே ஏற்பட்ட  துப்பாக்கி சூட்டில்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

தெல் குமார என்று அழைக்கப்படும் ஹெந்தவிதானகே  செல்லின் குமார என்ற 45 வயதான நபரே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.