எல்லேயில் பத்திரிசியார் கல்லூரி அணி, உரும்பிராய் சைவ தமிழ் வித்தியாலயம் ஆகியன சம்பியன்

Published By: Priyatharshan

11 May, 2018 | 05:43 AM
image

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே போட்டிகளில் ஆண்கள் பிரிவில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியும் பெண்கள் பிரிவில் உரும்பிராய் சைவ தமிழ் வித்தியாலயமும் சம்பியனாகின. 

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற. ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 40 பந்துகளில் 14 விக்கெட்டுக்களை இழந்து 13 ஓட்டங்களைப் பெற்றது. கியூமன் (8), மொனிக் (2), டெனிசன் (1), அஜந்தன் (1), பெனான்ஸன் (1) அகியோர் ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வரணி மகா வித்தியாலய அணி எதிரணியின் சிறப்பான களத்தடுப்பால் 45 பந்துகளில் வெற்றி 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. கனுசாந் (2), மதுசன் (1), அர்ச்சிகன் (1), அதீஸ் (1) ஆகியோர் ஓட்டங்களைப் பெற்றனர். சிறந்த எல்லே வீரராக புனித பத்திரிசியார் கல்லூரியின் கியூமன் தெரிவு செய்யப்பட்டார். 

மூன்றாம் இடத்தை வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயம் பெற்றது.

பெண்கள் பிரிவு

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி நிர்ணயிக்கப்பட்ட 40 பந்துகளில் சகல விக்கெட்களையும் இழந்து 4 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் சுவர்ணசீலி 2 ஓட்டங்களையும், மனிசா, தயாலசீலி ஆகியோர் தலா ஒரு ஓட்டத்தையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உரும்பிராய் சைவ தமிழ் வித்தியாலய அணி 18 பந்துகளில் 4 விக்கெட்களை இழந்து 5 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. கீர்த்திகா 2 ஓட்டங்களையும், விதுசாளனி, நிரோஜினி, டர்சி ஆகியோர் தலா ஒரு ஓட்டத்தையும் பெற்றனர். 

சாவகச்சேரி மகளிர் கல்லூரி அணி மூன்றாம் இடத்தைப் பெற்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35