ஹமீத் அல் ஹூசெய்னி கல்லூரியின் பழைய மாணவர்கள் கிரிக்கெட் கொண்டாட்ட விழா போட்டியில் ப்றின்ஸ் வொரியர்ஸ் சம்பியனானது.

ஹமீதியன்ஸ் சுப்பர் சிக்ஸர்ஸ் என்ற பெயரில் கொலன்னாவை உமக்லியா மைதானத்தில் நடத்தப்பட்ட 5 ஒவர்களைக் கொண்ட அணிக்கு அறுவருக்கான இப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பூம் பூம் கய்ஸ் அணியை 4 விக்கெட்களால் வெற்றிகொண்டு சம்பியனானது. 

ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியின் அபிவிருத்தியை முன்னிட்டு நிதி திரட்டும் நோக்கில் இப் போட்டி நடத்தப்பட்டதுடன் பழைய மாணவர்களைக் கொண்ட 20 அணிகள் பங்குபற்றின. 

கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் பூம் பூம் கய்ஸ் அணி 5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றது. எம். பர்ஸீன் 9 பந்துகளில் 47 ஓட்டங்களை விளாசினார். ப்றின்ஸ் வொரியர்ஸ் 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தை சூடியது. எம். அஸாருதீன் 11 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்றார்.

கோப்பைக்கான இறுதிப் போட்டியில் ரெட் ஈக்ள்ஸ் அணி சம்பியனானது.

சிறந்த துடுப்பாட்டக்காராக பர்ஸீனும் சிறந்த பந்துவீச்சாளராக எப். நவாஸும், தொடர்நாயகனாக அஸார்தீனும் தெரிவாகினர்.