வவுனியா, செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் தந்தையின் வாகனம் மோதி மகளொருவர் பலியான சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் உள்ள சுதர்ஷன் என்பவர்  தனது ஐந்து வயது மகளான ருஷாஜி என்பவரை  முன்பள்ளி பாடசாலைக்கு தனது வேனில் ஏற்றி சென்று இறக்கி விட்டு தனது வாகனத்தை முன்நோக்கி நகர்த்திய போது மகள்  வாகனத்தின் முன்பக்கமாக கடப்பதை அவதானிக்காத தந்தை மகள் மீது வாகனத்தால் மோதியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த குறித்த மகள் வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.