ஐ.பி.எல்.  போட்டிகளில் பிளே ஓப் சுற்றுக்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அப் போட்டிகள் தொடங்கும் நேர அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக  ஐ.பி.எல் நிறுவனத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்  போட்டிகளின் 11 ஆவது தொடரின் 41 போட்டிகள் முடிவுற்ற நிலையில் தற்போது போட்டிகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளன. அந்த வகையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மும்பையில் முதலாவது தகுதிச் சுற்று இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 23 ஆம் திகதி கொல்கத்தாவில் எலிமினேட்டர் சுற்றும், 25 ஆம் திகதி இரண்டாவது தகுதிச் சுற்று கொல்கதாவின்  ஈடன் கார்டன் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

இந்த 11 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மும்பையி்ன் வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 

ஐ.பி.எல்  போட்டிகளின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட நேர அட்டவணையி்ன் படி இறுதிக் கட்டப் போட்டிகள் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் எனக்  குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ரசிகர்களின் நலன் கருதி இறுதிப் போட்டிகள் யாவும் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் என ஐ.பி.எல் நிறுவனத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.