மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால்  ஹட்டன் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 187 வீடுகள் நிர்மாணப்பனிகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மக்கள் பாவனைக்கு கையளிப்பது  தொடர்பிலான கலந்துயாடலொன்று  ஹட்டனில் இன்று  இடம்பெற்றது.  

கலந்துரையாடலின் போது  அடுத்த வாரமளவில் மண்சரிவு,  தீ விபத்து மற்றும்  மண் சரிவு அபாயத்தினை எதிர்கொண்டுள்ள மேபீல்ட் இஞ்சற்றி . டில்குற்றி. பம்பரகலை. மானெலி. கெனில்வோர்த். ஹொன்சி. மவூன்வேர்னன் மத்தியபிரிவு, டிக்கோயா, பூல்பேங் புரவூன்லோ ஆகிய தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 187 வீடுகள் அடுத்த வாரமளவில் மக்களுக்கு கையளிக்க தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது. 

ஹட்டன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள், அமைச்சரின் பிரத்தியேக பணி செயலாளர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள், தோட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதேவேளை எதிர்வரும் 20ஆம் திகதி டிக்கோயா - பூல்பேங் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள்  பி.வி.கந்தையா புரம் மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளதோடு பல வருடகாலமாக புனரமைப்பு செய்யப்படாத டீ சைட் தொடங்கி மொக்கா வரையான 8 கிலோமீட்டர் பாதை 3 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப பணிகளும் அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.