"கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" : கர்ச்சிக்கும் ட்ரம்ப்

Published By: Digital Desk 7

10 May, 2018 | 02:06 PM
image

"ஈரான் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக கடந்த  செவ்வாய்க்கிழமையன்று அறிவித்ததோடு ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

இருப்பினும் இதை சற்றும் பொருட்படுத்தாத ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி,

"ஈரான் யுரேனியம் செறிவூட்டலை எந்த வரம்பும் இன்றி தொடரும், ஆனால் தற்போது அதை  செய்வதை தவிர்க்கிறோம்" என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம்  ஈரான் அணு ஆயுத சோதனையை தொடர்ந்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

பதிலளித்த ட்ரம்ப்,

“ஈரான் அணு ஆயுத சோதனையை தொடங்கக்கூடாது என நான் அந்நாட்டுக்கு அறிவுறுத்துவேன். அறிவுறுத்தியும்  அவர்கள் அணு ஆயுத சோதனையை தொடரும் பட்சத்தில் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52