கட்டுநாயக்க அதிவேக வீதியில் சொகுசு பஸ்ஸில் நின்று கொண்டு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு அதிவேக வீதியினூடாக  நீர்கொழும்பிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் பஸ்ஸில், நாளுக்கு நாள் நின்று கொண்டு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து  வருவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் பஸ்ஸில் இருக்கும் ஆசனத்திற்கு ஏற்றதாக பயணிகளை ஏற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பாக நீர்கொழும்பு மற்றும் கொழும்பைச் சேர்ந்த  பொறுப்பாளர்களின் எண்களுக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு  செய்தும் இதுவரை எந்தவித தீர்வும் இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.