(லியோ நிரோஷ தர்ஷன்)

கடற்கரையில் ஒரு பெண் மாத்திரம் அல்ல. தெரிவுக்கு பல பெண்கள் இருப்பார்கள்.  அவ்வாறு தான் முதலீடுகள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் நிலைப்பாடுகளும். எனவே அரசாங்கத்தின் ஸ்திரதன்மை தற்போது நாட்டுக்கு மிக முக்கியம் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு  தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

அரசியல் ஸ்திரம் அற்ற நாட்டில் சர்வதேச முதலீடுகள் உள்வாங்கப்படாது. எனவே எஞ்சிய இரண்டு வருடங்கள் ஒரு உறுதியான அரசாங்கத்தை கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் பொருளாதார ரீதியான இலக்குகளை வெற்றி கொள்ள முடியும் . அவ்வாறு இல்லை  என்றால் சர்வதேச நாடுகள் வேறு நாடுகளில் முதலீடுகளைச் செய்யும் . ஏனெனில் அவர்களுக்கு முதலீடு செய்வதற்கு இலங்கை மாத்திரம் நாடல்ல . வேறு நாடுகள் அவர்களுக்கு உலகில் உள்ளன என்றார்.