சோமாலியா மாகாணத்தில் உள்ள மொகடிஷீயில் உள்ள சந்தையில் நேற்று பயங்கராவதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

சோமலியா நாட்டில் அல்கொய்தா இயக்கத்தின் ஆதராவளர்களான அல் ஷபாப் பயங்கரவாதிகள் இயங்கி வருகின்றனர். இவர்கள் அந்நாட்டில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்தி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று இந்த பயங்கரவாதிகள் மொகடிஷுவில் அருகில் உள்ள லாயென் நகரில் இயங்கிவரும் சந்தையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இத் தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த மாதம் அல் ஷபாப் பயங்கராவதிகள் மொகடிஷு பகுதியிலுள்ள  நட்சத்திர விடுதியில்  நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.