ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதால் இந்தியாவில் பெற்றோல், டீசல் என்பவற்றின் விலை உயர்வதுடன் அந் நாட்டுக்கு பண வீக்கம் ஏற்படும் அபாயமும் தோன்றியுள்ளது.

இந்தியா அதிகளவான கச்சா எண்ணெய்யை ஈராக், சவுதி அரேபிய மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிடமிருந்தே இறக்குமதி செய்கின்றது. 

இந் நிலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஈரான் நட்டுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக   ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். 

இதனால் இந்தியாவில் பெற்றோல், டீசல் போன்றவற்றின் விலை அதிகரிப்பதுடன் பணவீக்கமும் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.

எனினும் ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பதைத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப் போவதாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.