பரிஸ் நகரில் “பலைஸ் டி டோக்கியோ” என்ற சமகால கலை அருங்காட்சியகம் ஒன்று ஈபிள் டவரின் நிழலில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த அருங்காட்சியகம் எதிர்வரும் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக 200 பேரிற்கு இலவசமாக அருங்காட்சியக வழிகாட்டுதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

குறித்த அருங்காட்சியத்தை பார்வை இடுவதற்கு நிர்வாணமாக மட்டுமே அனுமதிக்கப்படுவர் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ் அருங்காட்சியகம் தொடர்பாக “ த பரிஸ் நேசரிஸ்ட்ஸ் அசோஷியேஷன்” தனது டுவிட்டர் பக்கத்தில்,  

இவ் அருங்காட்சியம் "இயற்கை நிலையில் புதிய அத்தியாயம்" எனவும் அருங்காட்சியத்திற்கு வருபவர்களுக்கு, "நினைவை விட்டு அகலாத மற்றுமொரு நாள்" எனவும் இங்கு வருபவர்கள், "பரிஸ் வரலாற்றில் இது முதல் முறை" எனவும் கூறுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.

அருங்காட்சியகம் பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் நாளில் “டிஸ்கோர்டியா டோர்டர் ஒப் த நைட்” என பெயரிடப்பட்ட இசை நிகழ்ச்சியும், அருங்காட்சியகத்தின் உச்சியில் மதுக்கலவை கொண்டாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்விற்காகன அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டு இரண்டே நாட்களில் அனைத்து டிக்கெட்களும் விற்பனையாகிவிட்டதாக “ த பரிஸ் நேசரிஸ்ட்ஸ் அசோஷியேஷன்”  தெரிவித்துள்ளது.

இங்கு வருபவர்கள் தாங்கள் விரும்பிய உணவை “ஒ நேச்சுரல்” என்ற குறித்த அமைப்பின் உணவகத்திலேயே பெற்றுக் கொள்ள கூடிய வசதியும் உண்டு என்கின்றனர்.

பரிஸின் தலைநகரில் கடந்த வருடம் நிர்வாண பூங்கா ஒன்று திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அப் பூங்காவிற்கு கிடைக்கப்பெற்ற வரவேற்பை தொடர்ந்தே இவ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.