(ரி.விரூஷன்)

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்படட ரயில்வே ஊழியரை பிணையில் செல்வதற்கு யாழ். நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில்  குடும்பப் பெண்ணிடம் ரயில்வே சீட்டை பரீட்சிக்கும் ஊழியர் தகாத முறையில் நடந்து கொண்டதுடன் ரயிலில் பயணித்த ஏனைய பயணிகளையும் தாக்க முயற்சித்தார். அத்துடன் அவர் இனத்துவேசமான வார்த்ததைகளையும் பிரயோகித்ததன் காரணமாக பொலிஸார் அவரை கைது செய்தனர்.

இந் நிலையில் கைது செய்யப்பட்ட அவர் யாழ். நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தபபட்டதுடன் நீதிவான் குறித்த நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கினார்.

மேலதிக செய்திகளுக்கு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இனவாதி கைது!