ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட் தொடர்பாக விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பி.பி.சி செய்தியாளர் அஸாம் அமீனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த புதிய கொள்கை முறைகள் தொடர்பான பதிவிற்கு, ஜனாதிபதி ஊடகப் பிரிவு,  “நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆனால் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்! செயலில் காட்டுங்கள்” என்று ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் விதத்தில் பதிவிட்டிருந்தது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட டுவிட்க்கு ஜனாதிபதியின் ஊடகப்பிரிவே ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் விதத்தில் பதில் டுவிட் செய்ததை ஸ்க்ரீன் ஷொட் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது நிலைமை சுமுகமான முறையில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இருந்த போதிலும் சர்ச்சைக்குரிய டுவிட்டை அழிப்பதற்கு முன்னர் அது தொடர்பாக விசாரணை செய்ய செய்தியாளர் அஸாம் அமீனுக்கு  குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.