காரொன்றை கள­வா­டிய 4 திரு­டர்கள் தம்மைத் துரத்தி வந்த பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பிக்க மேற்­கொண்ட முயற்­சியின் போது அந்தக் காரை தவ­று­த­லாக சிறைச்­சாலை வளா­கத்­திற்குள் செலுத்தி வந்து பொலி­ஸா­ரிடம் வச­மாக சிக்கிக் கொண்ட விநோத சம்­பவம் தென் ஆபி­ரிக்­காவில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் குறிப்பிட்ட கார் திருடர்களை கேப் நகரில் துரத்திச் சென்ற போது பொலிஸாரிடமிருந்து தப்பும் முகமாக பல்வேறு வீதிகளிலும் காரை வேகமாக செலுத்திய அந்தத் திருடர்கள் இறுதியில் தம்மை அறியாது அந்தக் காரை பொல்ஸ்மூர் சிறைச்சாலை வளாகத்திற்குள் செலுத்தி வந்து பொலிஸாரிடம் வசமாகச் சிக்கிக் கொண்டதாக கேப் நகர சட்ட அமுலாக்க அலுவலகத்தின் பேச்சாளரான வேன் டயஸன் தெரிவித்துள்ளார்.