திரு­ம­ணத்­திற்கு ஒரு சில நாட்­களே இருந்த நிலையில் முத­லையால் கடி­யுண்டு கையை இழந்த மண­மகளை வைத்தியசாலையிலிருந்த  தேவா­ல­யத்தில் திரு­மணம் செய்த சம்­பவம் சிம்­பாப்­வேயில் இடம்­பெற்­றுள்­ளது.

மண­ம­க­ளான ஸனேலி நட்­லோவு சாம்­பெஸி ஆற்றில் தனது வருங்­காலத் துணை­யான ஜமி பொக்­ஸுடன் படகில் சவாரி செய்து கொண்­டி­ருந்த போது முத­லை­யொன்று அவ­ரைத் தாக்கி அவ­ரது கர­மொன்றை வாயால் கௌவி­யுள்­ளது.

இத­னை­ய­டுத்து முத­லையால் கடி­யுண்டு கை கடும் சேதத்­துக்­குள்­ளான நிலையில் ஸனேலி வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்டார். அங்கு அவ­ரது மோச­மாக சேத­ம­டைந்த கைப் பகுதி வைத்தியர்­களால் வெட்டித் துண்­டிக்­கப்­பட்­டது.

குறித்த இருவரும்  கடந்த சனிக்­கி­ழமை விக்­டோ­ரியா நீர்­வீழ்ச்­சிக்கு அருகில் திரு­மணம் செய்து கொள்ள ஏற்­க­னவே திட்­ட­மிட்­டி­ருந்­தனர்.

ஆனால் ஸனே­லிக்கு ஏற்­பட்ட அசம்­பா­வி­தத்தால் அவர்­க­ளது திரு­மணம் சிம்­பாப்­வேயின் இரண்­டா­வது மிகப் பெரிய நக­ரான புலாவயோவிலுள்ள மற்றர் டெயி வைத்தியசாலை­யி­லுள்ள தேவா­ல­யத்தில் நடை­பெற்­றது.