இந்தியாவில் இம்பாலைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் தனது தந்தையுடன் இணைந்து பிளாஸ்டிக்கை மீள் சுழற்சி செய்து பணம் சம்பாதிக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்த சடகோபன் இட்டாமி சிங் தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர் தொழில் ஒன்றை ஆரம்பிக்க விரும்பினார்.  

குறித்த இளைஞர் தந்தையுடன் இணைந்து 2007-ஆம் ஆண்டு பிளாஸ்டிக் தொழிற்சாலையை தொடங்கினார்.

வீணாக வீசப்பட்ட பிளாஸ்டிக்கை மீண்டும் உபயோகிக்கலாம். ஆரம்பத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் டில்லியில் மீள் சுழற்சி செய்யப்பட்டன. ஆனால் 2010-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட புதிய கருவிகளினால் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் மீள் சுழற்சி செய்யப்படுகிறது.

நாகரிகம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாகவும், அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருளாகவும் பிளாஸ்டிக் போத்தல் கலாசாரம் இப்போது பரவிவிட்டது. இந்த பிளாஸ்டிக் போத்தல் மனிதர்களின் உடல்நலம், மற்ற உயிரினங்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் போன்றவற்றை கடுமையாக பாதிக்கிறது. இன்று பிளாஸ்டிக் என்பது ஒட்டு மொத்த உலகத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. 

இந்நிலையில், இம்பாலைச் சேர்ந்த தந்தை-மகன் பிளாஸ்டிக் மீள் சுழற்சி மூலம் ஆண்டிற்கு 1.5 கோடி ரூபா சம்பாதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.