ஜனாதிபதி செயலனி பிரதானி எல்.கே மஹனாம மற்றும் மர கூட்டுத்தாபன தலைவர் பி . திசாநாயக்க ஆகியோர் எதிர் வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டார்.

சந்தேகநபர்களால் 10 பில்லியன் ரூபா இலஞ்சமாக கோரப்பட்டிருந்த நிலையில், அதில் முற்பணமாக 2 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ளும் போதே மஹாநாம மற்றும் திசாநாயக்க ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கும்  விதிக்கப்பட்டிருந்த விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில் இன்று கொழும்பு பிரதான  நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணைகளை விரைவாக நிறைவுக்கு கொண்டு வருமாறும் நீதவான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.