டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த பெண்ணொருவர் சுமார் ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான  தங்க நகைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 45 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க பிரிவு மற்றும் பொலிஸார் மேற்கொண்டுவருகிறார்.