ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம்   ஜூன் 7 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று  மாலை நடைபெற இருக்கிறது.  

காலா படத்தின் தமிழ் பதிப்பில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன. மற்ற மொழிகளில் 9 பாடல்கள் உள்ளன. இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கும் நிலையில், பாடல்கள் இன்று காலை 9 மணிக்கு, அனைத்து விதமான டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் என்று ‘காலா’ படத்தை தயாரித்துள்ள நடிகர் தனுஷ் நேற்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

அதன்படி, இன்று காலை 9 மணியளவில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாடல்களை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளார்.