ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் வனராஜா பகுதியில் இன்று காலை 5 மணியளவில்  ஜீப்வண்டி பஸ்ஸோடு  மோதியதில் ஜீவண்டியின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .

ஹட்டனில் இருந்து பொகவந்தலாவ பகுதியியை நோக்கி பயனித்த ஜீப்வண்டி பொகவந்தலாவவையில் இருந்து ஹட்டன் நோக்கி பயனித்த பஸ்ஸோடு மோதியதிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.