இலங்கையின் நல்லிணக்க மற்றும் சீர்த்திருத்த முயற்சிகளிற்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுங் லாய் மார்கியூ இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரங்களில் ஏற்படும் முன்னேற்றம் இலங்கையில் நிரந்தரசமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் வழிகோலும் என ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக நம்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய தினத்தை குறிக்குமுகமாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்கியதன் காரணமாகவும் மீன்பிடித்தடையை நீக்கியதன் காரணமாகவும் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.