இரும்புத்திரை படத்தினை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாக படத்தின் ஒருபகுதியை மட்டும் ஊடகவியலாளர்களுக்கு திரையிட்டுக் காட்ட படக்குழு முடிவு செய்துள்ளது. 

விஷால் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்த, நாயகனாக நடித்திருக்கும் படம் இரும்புத்திரை. 

இப்படத்தில் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். நடிகர் அர்ஜூன் வில்லனாக நடித்திருக்கிறார். டில்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.  Buy Tickets பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படம் எதிர்வரும் 11ஆம்  திகதி வெளியாகிறது. சமூகத்தின் முக்கிய பிரச்சினை ஒன்றை மையப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இரும்புத்திரையை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் முயற்சியாக இன்று இப்படத்தின் முதல்பாதியை மட்டும் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டுக் காட்ட படக்குழு முடிவு செய்துள்ளது.