கொழும்பு தொடக்கம் புத்தளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்தில் தலையை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இரவு சிலாபம் - அளுத்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

 புகையிரத ஊழியர்களினால் குறித்த இளைஞரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.