(எம்.மனோசித்ரா)

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாவி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த வேன் பாதையில் சென்று கொண்டிருந்த குறித்த சிறுவன் மீது  மோதியுள்ளது. 

வேனில் மோதுண்ட சிறுவன்  பலத்த காயத்துக்குள்ளான நிலையில்  மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ன. எனினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

விபத்தில் பலியான சிறுவன் புத்தளத்தைச் சேர்ந்த  11 வயதுடைய அசுது தனஞ்சய என அடையாளம் காணப்பட்டுள்ளது.