21 பீரங்கி வேட்டு மரியாதைகளுடன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார் மைத்திரி

Published By: Priyatharshan

08 May, 2018 | 10:44 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு  இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியை சபாநாயகர் கரு ஜயசூரிய வரவேற்றார். அத்துடன் ஜனாதிபதிக்கு 21 பீரங்கி வேட்டுகளும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதுமாத்திரமின்றி உத்தியோகபூர்வ சபை அமர்வை ஆரம்பித்து விட்டு ஜனாதிபதி தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையையும் ஆற்றினார். 

அரசியலமைப்பின் 70 ஆவது ஷரத்துக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வினை ஒத்திவைத்தார். இதன்பிரகாரம்  இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரண்டாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. 

இரண்டாவது அமர்வினை முன்னிட்டு இன்று பாராளுமன்ற வளாகத்தில் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பொலிஸ், இராணுவம மற்றும் விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு கடமைக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த  அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய இராணுவ மரியாதையுடன் பாராளுமன்றத்திற்கு 1.31 மணிக்கு  வருகை தந்தார். இவரை பாராளுமன்றத்தின் செயலாளர் தம்பிக்க தஸநாயக்க வரவேற்றார். இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 1.40 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். இவரை சபாநாயகர் கரு ஜயசூரிய வரவேற்றார். 

அத்துடன் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உரிய நேரத்தில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததுடன்  பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவிந்திர விஜேகுணவர்தன, இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர உட்பட முப்படைகளின் பிரதானிகள் கலந்து கொண்டு சபாபீடத்தின் பார்வையாளர் களரியில் அமர்ந்திருந்தனர். அதுமாத்திரமின்றி சர்வமத தலைவர்களும் பார்வையாளர் களரி அமர்ந்திருந்தனர். மேலும் வெளிநாட்டு தூதுவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. 

எனினும் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச வருகை தரவில்லை என்பது விசேட அம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19