எப்­போதும் அமை­தியின் உரு­வ­மாக புன்­னகை தவழ வலம் வரும் பாப்­ப­ர­சரை சின­ம­டைய வைத்த சம்­பவம் மெக்­ஸிக்­கோவில் இடம்­பெற்­றுள்­ ளது.

அவர் நேற்றுமுன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை மெக்­ஸிக்­கோவின் மொரெல்லா நக­ரி­லுள்ள மைதா­ன ­மொன்­றுக்கு விஜயம் செய்த வேளை அவரை சூழ்ந்து கொண்ட கூட்­டத்­தினர் அவ­ரது கரங்­களைப் பற்றி பிடித்து இழுத்தும் அவ­ரது இடுப்பில் கட்­டி­யி­ருந்த நாடாவை பற்றி இழுத்தும் அவரை சக்­க­ர ­நாற்­கா­லியில் அமர்ந்­தி­ருந்த வயோ­திபர் ஒருவர் மீது நிலை­த­டு­மாறி விழும் நிலைக்கு உள்­ளாக்­கி­ய­தை­ய­டுத்து அவர் தனது கட்­டுப்­பாட்­டையும் மீறி சினத்­துக்­குள்­ளா­கி­யுள்ளார்.

இதன்­போது பாப்­ப­ரசர் “என்ன உங்­க­ளுக்கு நடந்­தது? சுய­ந­ல­மாக செயற்­ப­டா­தீர்கள்" என அதட்டும் வகையில் சத்­த­மிட்­டுள்ளார்.

பாப்­ப­ரசர் உட­ன­டி­யாக தன்னை சுதா­க­ரித்துக் கொண்டு அந்தக் கூட்­டத்­தி­லி­ருந்த நப­ரொ­ரு­வரின் தலையில் முத்­த­மிட்டு ஆசீர்­வ­தித்த போதும், அவரது முகத்தில் சினம் தொடர்ந்து பிரதிபலித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.