இங்கிலாந்தின் கால்பந்து கழக அணியான ஆர்சனல் கழக அணியின் பயிற்றுவிப்பாளர் பணியில் இருந்து ஆர்சன் வெங்கர் தன் பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

கடந்த 22 ஆண்டுகளாக  ஆர்சனல் அணிக்கு பயிற்சியாளராக கடமையாற்றிய ஆர்சன் வெங்கர் கடந்த 1996 ஆம் ஆண்டில் இருந்து  ஆர்சனல் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

 லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் ஆர்சனல் அணிக்கும், பர்ன்லி அணிக்கும் இடையே கால்பந்து போட்டி இடம்பெற்றது.

இதில் ஆர்சனல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பர்ன்லி அணியை வீழ்த்தியது. இப்போட்டியைக் காண 60 ஆயிரம் ரசிகர்கள் குழுமியிருந்தனர்.

இப் போட்டியினை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்சனல் அணியினரால் ஆர்சன் வெங்கருக்கு  பிரியாவிடை வழங்கப்பட்டது.

இவர் தலைமையின் கீழ் 3 பிரீமியர் லீக் பட்டங்கள்,  7 எப்.ஏ. கிண்ணங்களை ஆர்சனல் அணி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.