“ஜனாதிபதி, பிரதமர் பகல் கனவு காண்கின்றனர் ; மஹிந்தவின் தலைமைத்துவமே மக்களின் எதிர்பார்ப்பு”

Published By: Daya

08 May, 2018 | 01:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதியும் ,பிரதமரும் பகல் கனவு கண்டு வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் செயற்படுவதையே அனைவரும் எதிர்ப்பார்க்கின்றனர் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இது தொடர்பில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவிக்கையில்,

2020ஆம் ஆண்டிற்கு  பிறகும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியை தொடரவிரும்பினாலும் ,நாட்டு மக்கள் அதனை அனுமதிக்கமாட்டார்கள் ஏனென்றால் தேசிய அரசாங்கத்தினை நாட்டு மக்கள் முழுமையாக நிராகரித்து விட்டனர்.

தேசிய அரசாங்கம் 2020ஆம் ஆண்டிற்கு பிறகும் தொடரும் என  ஜனாதிபதியும் , பிரதமரும் பகல் கனவு கண்டு வருகின்றனர். தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் செயற்படுவதையே அனைவரும் எதிர்ப்பார்க்கின்றனர்.

தேசிய அரசாங்கம் தொடர்ந்து நாட்டை நிர்வகிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  குறிப்பிடுவது வேடிக்கையாகவே உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020ஆம் ஆண்டு போட்டியிட்டால் பாரிய தோல்வியினை எதிர்கொள்ள நேடிடும். ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால அரசியல் நிலைமைகளும் பரிதாபத்திற்குரியதாகவே தற்போது  காணப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுவேட்பாளராக 2015ஆம் ஆண்டு போட்டியிட்டதைப் போன்று மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடலாம் ஆனால் அது எந்நளவிற்கு சாத்தியப்படும் என்பது சந்தேகத்திற்கிடமாகவே காணப்படுகின்றது.இரு கட்சிகளுக்குமிடையில் தற்போது ஒருமித்த இணக்கப்பாடற்ற தன்மைகளே காணப்படுகின்றது. தேசிய அரசாங்கத்தினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது தொடர்பில் 5பேர் உள்ளடற்கிய குழுவொன்றினை நியமித்து அதன் தலைமைத்துவ பொறுப்புக்களை அமைச்சர் சரத் அனுமுகமவிடம் கையளித்தார்.

தேசிய அரசாங்கம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் என  ஜனாதிபதியும் , பிரதமரும் பகல் கனவு கண்டு வருகின்றனர். முறையற்ற அரசாங்கத்தின் மூன்று வருட கால நிர்வாகத்தின் காரணமாக நாட்டு மக்கள் பல அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு முனம் கொடுத் வந்துள்ளனர். மீண்டும் அவை தொடருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள் .கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இந்த அரசாங்கத்தினை மக்கள் முழுமையாக நிராகரித்து விட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தின் கீழ் மீண்டும் நாடு செயற்படுவதையே அனைவரும் விரும்புகின்றனர்.இதற்கான ஆரம்ப கட்டமே உள்ளராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள்.இந்த அரசாங்கத்தின் பதவி காலம் குறுகியதாகவே காணப்படுகின்றது. 

குறித்த காலக்கட்டத்திற்குள் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ள முடியாது. 2020ம் ஆண்டிற்கு பிறகே நாட்டில் முழுமையான மாற்றம் தோற்றம்  பெறும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17