மட்டக்குளி பிரதேசத்தில் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குழுவொன்றை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்குளி சமித்புர பிரதேசத்தில் இன்று காலை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பாதாள கும்பலுடன் போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்ந தேடுதல் நடவடிக்கையின் போது இராணுவ சீருடையை ஒத்த இராணுவ சீருடையொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.