கிழக்கு மாகாண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றம்!!!

Published By: Digital Desk 7

08 May, 2018 | 12:41 PM
image

கிழக்கு மாகாண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் தகவல் தொடர்பு அதிகாரி வைத்தியர் எம்.ஏ. சுஹைல் அஹமட் இன்று தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாம உடனான சந்திப்பில் வாக்குறுதியளிக்கப்பட்ட விடயங்கள் அமுல்படுத்தப்படாமல் உதாசீனம் செய்யப்பட்டிருந்ததால் கிழக்கு மாகாண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கடந்த 26ஆம் திகதி கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

தமது கோரிக்கைக்கு அமைவாக அரசாங்க வைத்தியர்களுக்கு 2018 ஜனவரியிலிருந்து அதிகரிக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவுகள், புதிய சுற்றறிக்கையின்படி மே மாதத்திற்குரிய சம்பளப் பட்டியலில் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவு சேர்த்துக் கொள்ளப்படல், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் தகுதியுடைய வைத்திய நிர்வாகி இல்லாததால் நோயாளிகளும், வைத்தியர்களும் ஏனைய சேவையாளர்களும் பல நிர்வாக சீர்கேடுகளை அனுபவிக்கின்றனர், எனவே அங்கு தகுதியுடைய வைத்திய நிர்வாகி நியமிக்கப்படல்,  திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஒரு பிரதிப் பணிப்பாளர் வெற்றிடத்திற்கு இரு பிரதிப் பணிப்பாளர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளமை போன்ற விடயங்களுக்குத் தீர்வு எட்டப்பட்டிருப்பதாக சுஹைல் அஹமட் மேலும் தெரிவித்தார்.

தமது அமைப்பு முன்னதாக மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடுகள் அமுலாக்கப்படாமல் உதாசினம் செய்யப்பட்டதால் தாம் வேறு வழியின்றி தொழிற்சங்க நடவடிக்கைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அது தற்போது வெற்றியளித்தள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27