இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் மனிதாபிமானமான நடவடிக்கைகளில் ஈடுபடும் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜெகத் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வருடாந்தம் சுமார் 3 இலட்சம் மக்களுக்கு தமது இடர்கால சேவையினை ஆற்றி வருகின்றது.

இன்றைய தினத்தின் போது, செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்க தொண்டர்கள் பாராட்டப்படவுள்ளனர்.

கொடுப்பனவு எதனையும் எதிர்பாராத நிலையில், இலங்கை செஞ்சிலுவை சங்க தொண்டர்கள் நாடளாவிய ரீதியாக பணியாற்றுகின்றனர்.

குறிப்பாக வெள்ளம், புயல் போன்ற இயற்கை அனர்த்தங்கள் உட்பட அவசர காலத்தில் பல்வேறு சேவைகளை, சங்கம் செய்து வருகின்றது.

இதேவேளை, வருடா வருடம் மே 8 ஆம் திகதியினை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் சிறப்பாக கொண்டாடி வருகின்றது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் என்பன உலகளாவிய ரீதியாக இன்று, சங்க தினத்தைக் கொண்டாடுகிறமை குறிப்பிடத்தக்கது.