மஹிந்தவையும் ஷிராந்தியையும் கைது செய்ய வேண்டும் 

Published By: MD.Lucias

18 Feb, 2016 | 09:22 AM
image

சி.எஸ்.என். தொலைக்­காட்சி நிறு­வனம் அர­சு­டை­மை­யாக்­கப்­ப­ட ­வேண்டும். யோஷி­தவை கைது­செய்­வ­தற்கு முன் அவ­ருக்கு வழி­ காட்­டிய மஹிந்த ராஜ­பக்ஷ ­வையும் ஷிராந்­தி­யை­யுமே கைது­செய்­தி­ருக்க வேண்டும் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணி யின் தலை­வரும் மத்­திய மாகா­ண­சபை உறு ப்­பி­ன­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார்.

கொழும்பில் மீண்டும் போதைப் பொருள் வியா­பா­ரிகள் மற்றும் பாதாள உலகக் கோஷ்­டி­யினர் தலை­தூக்க பொலிஸார் இட­ம­ளிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.

அதி­கா­ரத்­ததை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

சி.எஸ்.என். தொலைக்­காட்சி நிறு­வ­னத்­தி­னூ­டாக பண­மோ­சடி இடம்­பெற்­ற­தாக தெரி­வித்து யோஷித ராஜபக் ஷ கைது செய்­யப்­பட்டு விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். அவர்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்களை இது­வரை அவரால் நிரா­க­ரிக்க முடி­யாமல் போயுள்­ளது.

அத்­துடன், சி.எஸ்.என். தொலைக்­காட்சி நிறு­வ­னத்­துக்கும் யோஷி­த­வுக்கும் எந்த தொடர்பும் இல்­லை­யென தெரி­வித்த இவர்கள் தற்­போது மக்­களின் பணத்தைக் கொண்டு அதனை ஆரம்­பித்­த­தாக கூறு­கின்­றனர். ஆனால் மக்­களின் பணத்தைக் கொண்டு ஆரம்­பித்­த­தாக கூறும் இவர்கள் யாரிடம் பணம் பெற்­றார்கள்? எவ்­வ­ளவு தொகை எடுத்­தார்கள்? என்­பது குறித்த எந்த தக­வலையும் இவர்­களால் குற்றப் புல­னாய்வு பிரி­வுக்கு சமர்ப்­பிக்க முடி­யாமல் போயுள்­ளது. அத்­துடன் இது தொடர்பில் யோஷி­தவை கைது­ செய்­வ­தற்கு முன் அவ­ருக்கு வழி­காட்­டிய மஹிந்த ராஜ­பக் ஷ­வையும் சிராந்­தி­யை­யுமே கைது­செய்­தி­ருக்க வேண்டும். இவர்­களால் தங்­க­ளது பிள்­ளையை இந்த விட­யத்தில் சரி­யான முறையில் வழி­ந­டத்த முடி­யாமல் போயுள்­ளது.

இவ்­வா­றான நிலையில் சி.எஸ்.என். தொலைக்­காட்சி நிறு­வ­னத்தின் அனைத்து சொத்­துக்­களும் அர­சு­டை­மை­யாக்­கப்­ப­டு­வதில் எந்த சந்­தே­கமும் இல்லை. அது அர­சு­டை­மை­யாக்­கப்­ப­ட­வேண்டும். ஏனென்றால் அரச தொலைக்­காட்சி நிறு­வ­னத்­துக்கு கிடைக்­கப்­பெற்ற பெரும்­பா­லான வரு­மானம் சி.எஸ்.என். தொலைக்­காட்சி நிறு­வ­னத்­திற்கு திருப்­பப்­பட்­டுள்­ளது.

மேலும் கடந்த காலத்தில் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் போதைப்பொருள் வியா­பாரம் மேலோங்கி இருந்­தது. ஆட்சி மாற்­றத்தின் பிறகு அது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனால் தற்­போது மீண்டும் கொழும்பில் போதைப்பொருள் வியா­பாரம் மற்றும் பாதாள கோஷ்­டி­யினர் தலை­தூக்­கி­யுள்­ள­தாக தக­வல்கள் எமக்கு கிடைக்­கின்­றன. இது தொடர்­பாக கொழும்­புக்கு பொறுப்­பான பிரதி பொலிஸ் மா அதிபர் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலைமை நீடித்தால் அர­சாங்­கத்­துக்கே அவப்­பெயர் ஏற்­படும்.

மேலும் சுதந்­திரக் கட்­சியின் தலைமைப் பத­வியை மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது நிறை­வேற்று அதி­கா­ரத்தின் மூலமே பெற்­றுக்­கொண்­ட­தாக மஹிந்த ராஜபக் ஷ கூறி­யுள்ளார். ஆனால் சுதந்­திர கட்­சியின் தலை­மைப்­ப­த­வியை தானே முன் வந்து விட்­டுக்­கொ­டுத்­த­தாக மஹிந்த இதற்கு முன் பகி­ரங்­க­மாக தெரி­வித்­தி­ருந்தார். என்­றாலும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வி­ட­மி­ருந்து சுதந்­திர கட்­சியின் தலை­மைத்­து­வத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்கு சுதந்­திரக் கட்சி யாப்பில் மேற்­கொண்ட திருத்­தத்தின் அடிப்­ப­டை­யி­லேயே தற்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு தலைமைப் பதவி கிடைத்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58