இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 14 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் வந்த 3 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.