ரஸ்ய ஜனாதிபதியாக நான்காவது தடவையாக விளாடிமிர் புட்டின் இன்று பதவியேற்றுள்ளார்.

கிரெம்ளினில் இடம்பெற்ற  புட்டினின் பதவியேற்பு நிகழ்வில் 5000ற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ரஸ்ய ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் கடந்த 18 வருடங்களாக பதவி வகித்து வரும் புட்டின் தனது உரையில் எங்கள் தந்தையர் நாட்டின் பெருமையை புதுப்பித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்யாவின் வலுவையும் வளத்தையும் அதிகரிப்பதற்கு ஜனாதிபதி என்ற அடிப்படையில்  என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என புட்டின் உறுதியளித்துள்ளார்.

கடந்த காலங்களில் ரஸ்யா பீனிக்ஸ் போன்று பல தடவை உயிர்த்தெழுந்துள்ளது என விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.