நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பின்தங்கிய கிரமமொன்றில் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையர்கள் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் செய்திவெளியிட்டுள்ளன. நைஜீரியாவின் கடுனா மாநிலத்தின் கவஸ்க கிராமத்தில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகமாக கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கால்நடைகள் மற்றும் சொத்துக்களை திருடும் நோக்குடன் செயற்படும் ஆயுதக்குழுக்களுக்கும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கும் தொடர்பிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

தாக்குதல் சம்பவத்தையடுத்து குறித்த கிராமப் பகுதியக்கு ஆயுதமேந்திய நைஜீரிய இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கொள்ளையர்களின் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு நைஜீரிய அரசாங்கம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மாதம் குறித்த பகுதியில் 14 சுரங்கத் தொழிலாளிகள் ஆயுதமேந்தியவர்களால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.