கன்னியாஸ்திரியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன்: காலம் கடந்து தன் மகளை கண்டு நெகிழ்ந்த தருணம்..!

Published By: J.G.Stephan

06 May, 2018 | 03:07 PM
image

இங்கிலாந்தின் லான்காஷிர் பகுதியில் கத்தோலிக்க தேவாலயத்தால் நடத்தப்படும் ஜான் ரேனால்ட்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர் எட்வர்ட் ஹயேஸ்.

1950 ஆம் ஆண்டு இவர், 12 வயது சிறுவனாக இருந்தபோது இல்லத்தில் இருந்த மேரி கான்லெத் என்ற கன்னியாஸ்திரியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக கன்னியாஸ்திரி கர்ப்பமானார். இப்படி கன்னியாஸ்திரியாக இருந்துகொண்டு வாழ்க்கையில் ஒழுக்கமற்று நடந்துகொண்ட காரணத்தால் அவர், இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கர்ப்பமான கன்னியாஸ்திரிக்கு பெண் குழந்தை பிறந்தது.

கன்னியாஸ்திரி மூலம் பிறந்த இக்குழந்தையை காலங்கள் கடந்து  சென்ற போதிலும் 76 வயதை எட்டியுள்ள எட்வர்ட், சந்தித்து சந்தோஷம் அடைந்துள்ளார்.

மகளுக்கு 62 வயதாகியுள்ளது. மகளுடனான சந்திப்பு குறித்து எட்வர்ட் கூறியதாவது, எனது மகளை முதல்முறையாக சந்திக்கும்போது எனக்குள் பதட்டம் இருந்தது.

எனது மகள் என்னைப்போன்றே நகைச்சுவை உணர்வு கொண்டவளாக இருக்கிறாள். அவளை சந்தித்ததில் அளவற்ற மகிழ்ச்சியை தான் அனுபவித்ததாக அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right