ஆர்­ஜென்­டீ­னாவின் டோபா மாகா­ணத்தில் உள்ளூர் அணிகள் மோதிய கால்­பந்து போட்­டியின் வீர­ர் ஒருவர் தனக்கு சிவப்பு அட்டை காட்­டிய நடு­வரை சுட்­டுக்­கொன்­றுள்ளார். சீஸஸ் புளோரஸ்(வயது 48) என்ற நடு­வரே உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

இச்­சம்­பவம் தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

உள்ளூர் அணி­க­ளுக்­கி­டை­யி­லான கால்­பந்து போட்­டி­யின்­போது ஒரு வீரர் எதிர் அணி வீர­ர­ரிடம் விதி­மு­றை­களை மீறும் வகையில் நடந்­து­கொண்டார். இதனால் அந்த வீர­ருக்கு சிவப்பு அட்டை காட்டி மைதா­னத்தை விட்டு வெளியே­று­மாறு நடுவர் தீர்ப்­ப­ளித்தார்.

நடு­வரின் முடிவால் ஆத்­தி­ர­ம­டைந்த அந்த வீரர் மைதா­னத்தை விட்டு நடு­வரைத் திட்­டி­ய­ப­டியே வெளியே­றினார். தனது அறைக்கு சென்ற அவர் அங்­கி­ருந்த துப்­பாக்­கியை எடுத்­துக்­கொண்டு மைதா­னத்­துக்குள் சென்று தன்னை வெளியேற்­றிய நடு­வரை சர­மா­ரி­யாக சுட்டார். துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் தலை, கழுத்து, மார்பு பகு­திகளில் நடுவர் காயத்­திற்கு இலக்­கானார். அத்­துடன் மைதா­னத்­தி­லி­ருந்த வீர­ர் ஒ­ரு­வரும் காயத்­திற்கு இலக்­கானார். போட்டி நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கும்­போதே நடுவர் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­ட­மையை நேரில் கண்ட ஏனைய வீரர்­களும், ரசி­கர்­களும் கடும் அதிர்ச்சி அடைந்­தனர்.

நடுவர் உட­ன­டி­யாக வைத்­திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்தார். காய­ம­டைந்த வீர­ருக்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­வ­தோடு தப்­பி­யோ­டிய வீரரை தேடும் நட­வ­டிக்­கை­களை பொலிஸார் எடுத்­துள்­ளனர்.