அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சட்டவிரோதமாக கப்பலொன்றின் மூலம் குடியேறமுற்பட்ட இலங்கை அகதிகள் 131 பேர் மலேசிய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 98 ஆண்கள், 24 பெண்கள், 9 குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த கப்பல் கடந்த முதலாம் திகதி இடைமறிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.