ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால  சிறி­சேன 8 ஆவது பாரா­ளு­மன்­றத்தின் இரண்­டா­வது  கூட்­டத்­தொ­டரை  நாளை மறு­தினம் செவ்­வாய்க்­கி­ழமை (08-05-2018)பி.ப 2.30 மணிக்கு ஆரம்­பித்­து­ வைத்து அர­சாங்­கத்தின் கொள்கை விளக்­க­வு­ரையை  நிகழ்த்தவுள்ளார் என அரசியல் தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

மேலும், ஜனா­தி­ப­தியை கௌர­விக்கும் பொருட்டு பீரங்கி வேட்­டு­கள் தீர்க்­கப்­படவுள்ளதோடு, முப்­ப­டை­யி­னரின் அணி­வ­குப்புடனேயே ஜனாதிபதி பாரா­ளு­மன்ற வீதியில் அழைத்துவரப்படுவார் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

 ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்­க­வுரை  மீதான விவாதம்  10 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை காலை 10.00 மணி - மாலை 6.30 மணி­வரை நடை­பெறும்.